
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேக்கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலை இணைந்து, திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில், 32ம் ஆண்டு தெய்வ சேக்கிழார் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று நடந்த விழாவில் விபுலானந்தர் யாழ்நுாலை, வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட்டார். இதில், இடமிருந்து வலம்: சேக்கிழார் ஆராய்ச்சி மைய துணை செயலர் ராஜாராமன், தஞ்சாவூர் தமிழ் பல்கலை பேராசிரியர் நல்லசிவம், ரசிக ரஞ்சனி சபா செயலர் நாகராஜன், சேக்கிழார் ஆராய்ச்சி மையம் தலைவரும் நீதிபதியுமான ஜெகதீசன், செயலர் மோகன் மற்றும் ராணி மேரி கல்லுாரி பேராசிரியர் கற்பகம்.