ADDED : பிப் 18, 2025 12:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,திருவல்லிக்கேணி, எல்லீஸ்புரத்தில், 72 குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள பழைய குடியிருப்பை இடித்து அகற்றி புதிதாக கட்ட, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவு செய்தது. இதற்காக முறையான நோட்டீஸ் வழங்கப்பட்டு, சிலர் வீடுகளை காலி செய்தனர்.
இந்நிலையில், வீட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எல்லீஸ்புரத்தைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் 60 பேர், அண்ணா சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
திருவல்லிக்கேணி போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடத்து, மறியலில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், ஓமந்துாரார் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டியவர்களுக்கு, சிரமம் ஏற்பட்டது.

