/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வியாசர்பாடி ' அத்தோ ' கடையில் முட்டைக்கு சண்டை: ரவுடி கைது
/
வியாசர்பாடி ' அத்தோ ' கடையில் முட்டைக்கு சண்டை: ரவுடி கைது
வியாசர்பாடி ' அத்தோ ' கடையில் முட்டைக்கு சண்டை: ரவுடி கைது
வியாசர்பாடி ' அத்தோ ' கடையில் முட்டைக்கு சண்டை: ரவுடி கைது
ADDED : டிச 08, 2025 05:05 AM
சென்னை: அத்தோ கடையில், மசாலா முட்டை கூடுதல் விலைக்கு விற்பதாக தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்ட ரவுடியை, போலீசார் கைது செய்தனர்.
வியாசர்பாடி, பி.வி., காலனியைச் சேர்ந்தவர் பாக்கியம், 47, வீட்டருகே, அண்ணா சாலை பிரதான சாலையில் அத்தோ கடை வைத்துள்ளார். 5ம் தேதி, இவரது கடைக்கு வந்த மர்ம நபர், வாழைத்தண்டு சூப் வாங்கி குடித்து விட்டு, மசாலா முட்டை கேட்டுள்ளார்.
அதற்கு, மசாலா முட்டை, 15 ரூபாய் என, பாக்கியம் கூறியுள்ளார். 'மற்ற கடைகளில், 10 ரூபாய் தானே, ஏன் கூடுதலாக 5 ரூபாய் வைத்து விற்கிறீர்கள்' எனக் கேட்டு பிரச்னை செய்துள்ளார்.
பிரச்னை செய்தவரை, பாக்கியத்தின் தங்கை கணவர் தமிழ்வாணன், 48, என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த மர்ம நபர், அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி விட்டதில், தமிழ்வாணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, எம்.கே.பி., நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த காட்டான் மோகன், 49, என்பவரை நேற்று கைது செய்தனர்.
இவர் மீது, ஐந்து வழக்குகள் உள்ளன. விசாரணைக்கு பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மோகன் சிறையில் அடைக்கப்பட்டார்.

