ADDED : ஆக 08, 2025 12:40 AM
சென்னை குடிநீர் வாரியம் சட்டம் - 1978, பிரிவு - 6, 2022ம் ஆண்டு, பிரிவு - 6 ஏ என, திருத்தம் கொண்டு வரப்பட்டது.
சென்னை மாநகராட்சி சட்டம் -1919 பிரிவு 99ல், 2022ம் ஆண்டு, பிரிவு 99 ஏ என, திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இதன்படி, பாதாள சாக்கடை திட்டம் இருந்தும், வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு வசதி எடுக்காமல் வடிகாலில் விட்டால், 30 நாள் கால அவகாசத்தில் இணைப்பு வழங்க நோட்டீஸ் வழங்கப்படும்.
அதையும் மீறினால், அபராதம், 'சீல்' வைப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
லாரிகளில் கழிவுநீரை ஏற்றி வந்து, வடிகால் உள்ளிட்ட நீர்நிலைகளில் விட்டால், அபராதத்துடன் லாரி பறிமுதல் செய்யப்படும்.
அபராதம் விவரம்
வகைப்பாடு முதல்முறை 2ம் முறை
வீடு 5,000 10,000
கடைகள் 25,000 50,000
அடுக்குமாடி குடியிருப்பு 1,00,000 'சீல்'வைப்பு
'மால்' வணிக கட்டடங்கள் 2,00,000 சீல் வைப்பு