ADDED : நவ 21, 2025 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கானத்துார்: கானத்துாரில் உள்ள மாயாஜால் பொழுதுபோக்கு மையத்தில், திடீரென தீ விபத்து நடந்தது.
இ.சி.ஆர்., கானத்துாரில் மாயாஜால் என்ற பொழுதுபோக்கு மையம் உள்ளது. நேற்று, அங்குள்ள கிடங்கில் திடீரென தீ பிடித்தது.
அருகில், ராட்டினத்தில் சுற்றிக்கொ ண்டிருந்த பள்ளி மாணவ - மாணவியர் உடனே வெளியேற்றப்பட்டனர்.
கோவளம் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். சம்பவம் தொடர்பாக, கானத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

