/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடி அருகே தீ விபத்து பைக்குகள் எரிந்து நாசம்
/
ஆவடி அருகே தீ விபத்து பைக்குகள் எரிந்து நாசம்
ADDED : மே 07, 2025 11:56 PM

ஆவடி, ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில், சி.டி.எச்., சாலையில், ஸ்ரீ வாரி ஆட்டோமொபைல்ஸ் என்ற பெயரில், 'ஹீரோ' ரக இருசக்கர வாகனங்கள் விற்பனையகம் உள்ளது.
இங்கு, மூன்றாவது தளத்தில் உள்ள குடோனில், 100 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
நேற்று அதிகாலை, குடோனில் இருந்து கரும்புகை வெளியேறி, தீ கொழுந்து விட்டு எரிந்தது. ஆவடி, அம்பத்துார் தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
அதற்குள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, ஆறு இருசக்கர வாகனங்கள் மற்றும் 'சோலார் பேனல்'கள் தீக்கிரையாகின.
தீ விபத்துக்கான காரணம் குறித்து, திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்.
***