/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தண்டவாள புற்களில் தீ விபத்து மின்சார ரயில் சேவை பாதிப்பு
/
தண்டவாள புற்களில் தீ விபத்து மின்சார ரயில் சேவை பாதிப்பு
தண்டவாள புற்களில் தீ விபத்து மின்சார ரயில் சேவை பாதிப்பு
தண்டவாள புற்களில் தீ விபத்து மின்சார ரயில் சேவை பாதிப்பு
ADDED : மார் 06, 2026 06:30 AM

சென்னை;தண்டவாளத்தின் ஓரத்தில் உள்ள புற்களில் ஏற்பட்ட தீ விபத்தால், சென்னை கடற்கரை - திருவள்ளூர் மின்சார ரயில், அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
சென்னை கடற்கரை - ராயபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளம் அருகே புற்கள் உள்ளன. நேற்று மாலை 3:15 மணிக்கு, அப்புற்களில் திடீரென தீ பிடித்து எரிய துவங்கியது.
இதை அறிந்த ரயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள், தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ கொழுந்துவிட்டு எரிந்து, அப்பகுதி முழுதும் பரவியது.
இதையடுத்து, ராயபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து, போராடி தீயை அணைத்தனர்.
இதனால், 3:30 மணிக்கு செல்ல வேண்டிய சென்னை கடற்கரை - திருவள்ளூர் மின்சார ரயில் நிறுத்தப்பட்டதால், பயணியர் அவதியடைந்தனர். தீயை அணைத்த அரை மணி நேரத்துக்கு பின், 4:00 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது.