sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 மின் வாரியத்தினர் போராட்டத்தால் அண்ணா சாலையில் கடும் நெரிசல்

/

 மின் வாரியத்தினர் போராட்டத்தால் அண்ணா சாலையில் கடும் நெரிசல்

 மின் வாரியத்தினர் போராட்டத்தால் அண்ணா சாலையில் கடும் நெரிசல்

 மின் வாரியத்தினர் போராட்டத்தால் அண்ணா சாலையில் கடும் நெரிசல்


ADDED : மார் 06, 2026 06:29 AM

Google News

ADDED : மார் 06, 2026 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பணி நிரந்தரம் கோரி, மின் வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர், சிந்தாதிரிபேட்டை கூவம் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால், அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழக மின் வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர், மின் வாரியத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சிந்தாதிரிப்பேட்டை டேம்ஸ் சாலை - மேற்கு கூவம் சாலை சந்திப்பில், கூவம் ஆற்றின் கரையோரம் நின்று, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவல்லிக்கேணி தீயணைப்பு படையினர், சிந்தாதிரிப்பேட்டை போலீசார் சேர்ந்து, அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது, ஆற்றில் இறங்கிவிடுவதாக மிரட்டல் விடுத்தனர். இதை காண்பதற்காக, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் நின்றதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

டேம்ஸ் சாலை முதல் ஸ்பென்சர் சிக்னல் வரை, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. திருவல்லிக்கேணி, எழும்பூர் போக்குவரத்து போலீசார், நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 30 நிமிடங்களுக்கு பின், அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் சீரானது.






      Dinamalar
      Follow us