/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் வாரிய அலுவலகத்தில் தீ கொடுங்கையூரில் மின் தடை
/
மின் வாரிய அலுவலகத்தில் தீ கொடுங்கையூரில் மின் தடை
மின் வாரிய அலுவலகத்தில் தீ கொடுங்கையூரில் மின் தடை
மின் வாரிய அலுவலகத்தில் தீ கொடுங்கையூரில் மின் தடை
ADDED : மே 17, 2025 10:03 PM
கொடுங்கையூர்:கொடுங்கையூர், கண்ணதாசன் நகரில் உதவி மின்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு 11 கே.வி.திறன் கொண்ட மின்பகிர்மான நிலையமும் உள்ளது.
நேற்று மாலை 6:00 மணியளவில், மின்வாரிய அலுவலகத்தில் ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணமாக, மின் மாற்றி தீப்பிடித்து எரிந்தது.
மேலும் பயங்கர சத்தத்துடன் மின் வடங்கள் வெடித்து சிதறி, தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அலுவலக ஊழியர்கள், உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். இது குறித்து மின் வாரிய அதிகாரிகள், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சத்தியமூர்த்தி நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.
இந்த தீ விபத்தால், கண்ணதாசன் நகர் 1வது பிளாக் முதல் 8வது பிளாக் வரை, அபிராமபுரம், திருவள்ளூவர் நகர், வாசுகி நகர், ஐஸ்வர்யா நகர் உள்ளிட்ட 3 கி.மீ., சுற்றுவட்டார பகுதிகளில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால், துாக்கமின்றி பகுதிவாசிகள் அவதியடைந்தனர்.