/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஹயாத்' ஹோட்டலில் தீ விபத்து 'கிராண்ட் மாஸ்டர் செஸ்' போட்டில் மாற்றம்
/
'ஹயாத்' ஹோட்டலில் தீ விபத்து 'கிராண்ட் மாஸ்டர் செஸ்' போட்டில் மாற்றம்
'ஹயாத்' ஹோட்டலில் தீ விபத்து 'கிராண்ட் மாஸ்டர் செஸ்' போட்டில் மாற்றம்
'ஹயாத்' ஹோட்டலில் தீ விபத்து 'கிராண்ட் மாஸ்டர் செஸ்' போட்டில் மாற்றம்
ADDED : ஆக 07, 2025 12:37 AM
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள 'ஹயாத்' ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதால், நேற்று துவங்குவதாக இருந்த 'கிராண்ட் மாஸ்டர் செஸ்' போட்டிகள், இன்றைக்கு மாற்றப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டை அண்ணா சாலையில், 'ைஹயாத்' என்ற பெயரில் நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு, 9வது தளத்தில் திரைச் சீலைகள், போர்வைகள் வைக்கப்பட்டிருந்த இரண்டு அறைகளில், தீ விபத்து ஏற்பட்டது.
உடனே, கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக வந்த வீரர்கள், ேஹாட்டலில் தங்கியிருந்தவர்கள் பத்திரமாக வேறு விடுதிக்கு மாற்றப்பட்டனர்.
தேனாம்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். தீ விபத்தால் அப்பகுதி முழுதும் கரும் புகை சூழ்ந்ததால், மூச்சு விடவே பலரும் சிரமப்பட்டனர். அதிஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை.
மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
போட்டி தள்ளி வைப்பு
இந்த ஹோட்டலில், கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் நேற்று துவங்கி, வரும் 15ம் தேதி வரை நடத்தப்பட இருந்தது.
தீவிபத்து காரணமாக, முதல் நாள் ஆட்டம் மட்டும், 7 ம் தேதியான இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதனால், ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டு இருந்த 11ம் தேதியும் போட்டிகள் நடத்தப்படும் எனவும், திட்டமிட்டபடி 15ம் தேதி போட்டிகள் நிறைவடையும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.