
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவேற்காடு, திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காயலான் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று காலை, கடை அருகே கொட்டப்பட்டு இருந்த குப்பை கழிவுகள், திடீரென தீப்பிடித்து எரிந்தன. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி, காயலான் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
நெடுஞ் சாலை முழுதும் கரும்புகை சூழ்ந்து வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தால், காயலான் கடையில் இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள், மரப்பொருட்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்து குறித்து, திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.