/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஷோரூமில் தீ விபத்து: சைக்கிள்கள் நாசம்
/
ஷோரூமில் தீ விபத்து: சைக்கிள்கள் நாசம்
ADDED : ஜன 01, 2026 04:39 AM
சென்னை: சென்னை, அமைந்தகரை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில், சைக்கிள் ஷோரூம், ஆவின் பாலகம், 'டிவி' கடைகள் உள்ளன.
மூடியிருந்த சைக்கிள் ஷோரூமில் இருந்து, நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு அதிகளவில் கரும்புகை வெளியேறியது. அதே கட்டடத்தில் தங்கியிருந்த உரிமையாளர்கள் மற்றும் தகவலறிந்த அண்ணா நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர்.
எனினும் ஷோரூமில் இருந்த விலையுயர்ந்த சைக்கிள்கள் மற்றும் அதன் உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமாகின. அருகில் இருந்த ஆவின் பாலகம் மற்றும் மற்றொரு கடையின் கூரையில் லேசான தீ விபத்து ஏற்பட்டிருந்தது. மின் கசிவால் தீ விபத்து நடந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.

