/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டயர் கிடங்கில் தீ விபத்து ரூ.50 லட்சம் பொருட்கள் நாசம்
/
டயர் கிடங்கில் தீ விபத்து ரூ.50 லட்சம் பொருட்கள் நாசம்
டயர் கிடங்கில் தீ விபத்து ரூ.50 லட்சம் பொருட்கள் நாசம்
டயர் கிடங்கில் தீ விபத்து ரூ.50 லட்சம் பொருட்கள் நாசம்
ADDED : ஆக 27, 2025 12:12 AM
செங்குன்றம், டயர் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டதால், செங்குன்றத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாயின.
செங்குன்றம் அடுத்த தண்டல் கழனியில், ஸ்ரீ கணபதி டயர் பாயிண்ட் கிடங்கு உள்ளது. கோயம்பேட்டை சேர்ந்த அபிநந்தன் நடத்தி வருகிறார். இங்கு இரு, பைக், கார்களுக்கான புதிய டயர்கள், பழைய டயர்களை மறு சுழற்சி செய்யும் தொழிற் பட்டைரையும் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல கிடங்கை தொழிலாளர்கள் மூடிவிட்டு சென்றனர். சிறிது நேரத்தில் கிடங்கில் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதை கவனித்த பகுதிமக்கள், காவல்நிலையத்திற்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தர்.
செங்குன்றம், அம்பத்துார் ஆகிய பகுதிகளில் இருந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வந்து, இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
***