/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அட்டை பெட்டி தயாரிப்பு ஆலையில் தீ விபத்து
/
அட்டை பெட்டி தயாரிப்பு ஆலையில் தீ விபத்து
ADDED : ஏப் 19, 2025 12:28 AM

இருங்காட்டுக்கோட்டை,ஸ்ரீபெரும்புதுார் அருகே, இருங்காட்டுக்கோட்டை 'சிப்காட்' தொழிற்பூங்காவுக்கு உட்பட்ட காட்டரம்பாக்கம் பகுதியில், 'டி.ஜி.ஐ., பேக்கேஜிங்' என்ற தனியார் தொழிற்சாலை இயங்குகிறது.
இங்கு, அட்டை பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. 150க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை 5:00 மணிக்கு, இந்த தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள், காயமின்றி பாதுகாப்பாக வெளியேறினர்.
இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், படப்பை உள்ளிட்ட தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஆறு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து 10 மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர்.
அதற்குள், தொழிற்சாலையில் இருந்த அட்டை பெட்டிகள், மூலப்பொருட்கள், இயந்திரங்கள் என, பல கோடி மதிப்புடைய பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என, சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

