ADDED : டிச 12, 2024 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தலைமைச் செயலக குடியிருப்பு, ராமலிங்க புரத்தைச் சேர்ந்தவர் பென்னி, 43. இவர், அதே பகுதியில் 'மெட்வின் என்டர்பிரைஸ்' 'டயபர்' மொத்த விலை கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று அதிகாலை 2:00 மணியளவில், தீவிபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து, கீழ்ப்பாக்கம், வேப்பேரி, வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீ அணைத்தனர்.
விபத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகியுள்ளன. மின் கசிவால் விபத்து நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
தலைமைச் செயலககாலனி போலீசார் விசாரிக்கின்றனர்.

