/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காசிமேடு மீன் ஷெட்டில் தீ விபத்து
/
காசிமேடு மீன் ஷெட்டில் தீ விபத்து
ADDED : மார் 25, 2025 02:06 AM

காசிமேடு,காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன் விற்பனைக்காகவும், பாதுகாக்கவும், 50க்கும் மேற்பட்ட மீன் ஷெட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, வலைகளும் பாதுகாக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஜி.எம்.பேட்டையை சேர்ந்த நித்தியானந்தம், 55, என்பவருக்கு சொந்தமான ஷெட், ஜீரோ கேட் அருகில் உள்ளது.
இந்த ஷெட்டில் நேற்று திடீரென்று தீ பற்றி எரிந்தது. ஷெட் முழுதும் தீ பரவி, அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது.
ராயபுரம் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த தீ விபத்தில், அங்கிருந்த வலைகள், மீன்பெட்டிகள் எரிந்து நாசமாயின.
காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்கள் சதி வேலை காரணமாக தீ விபத்து நடந்ததா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.