/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாடம்பாக்கம் குப்பை கிடங்கில் கொழுந்துவிட்டு எரிந்த தீ
/
மாடம்பாக்கம் குப்பை கிடங்கில் கொழுந்துவிட்டு எரிந்த தீ
மாடம்பாக்கம் குப்பை கிடங்கில் கொழுந்துவிட்டு எரிந்த தீ
மாடம்பாக்கம் குப்பை கிடங்கில் கொழுந்துவிட்டு எரிந்த தீ
ADDED : ஜன 30, 2025 12:42 AM

சேலையூர் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் சேகரமாகும் குப்பை, மேற்கு தாம்பரம் கன்னடப்பாளையம், பம்மல் விஸ்வேசபுரம், மாடம்பாக்கம் ஆகிய இடங்களில் கொட்டப்படுகிறது.
இதில், 5வது மண்டலத்தில், நாள்தோறும் சேகரமாகும், 80 டன் குப்பை, மாடம்பாக்கம் கிடங்கில் கொட்டப்படுகிறது.
இதனால், அங்கு மலை போல் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம், கொசு தொல்லையால் சுற்றியுள்ள மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இங்கிருந்து, சில நாட்களாக, மறைமலை நகரை அடுத்துள்ள ஆப்பூருக்கு குப்பை எடுத்து செல்வது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை, குப்பை கிடங்கு திடீரென தீப்பற்றி எரிந்தது. சற்று நேரத்தில், தீ மளமளவென பரவி, கொழுந்துவிட்டு எரிந்ததால், அப்பகுதியில் பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது.
தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து, 2 வாகனங்கள் விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. 10 லாரிகளில் தண்ணீர் எடுத்து வரப்பட்டது.
மேலும், இரண்டு பொக்லைன் வாயிலாக குப்பையை கிளறி, தண்ணீர் ஊற்றி அணைக்கும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டது.
இப்பணிகளை, மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் பார்வையிட்டு, வேகப்படுத்த உத்தரவிட்டார். தீ விபத்து குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

