/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நுங்கம்பாக்கம் பர்னிச்சர் கடையில் தீ
/
நுங்கம்பாக்கம் பர்னிச்சர் கடையில் தீ
ADDED : ஜூன் 23, 2025 01:52 AM
சென்னை:நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில், 'டிராப்ஸ் அண்டு ட்ரீம்ஸ்' என்ற பிரமாண்டமான பர்னிச்சர் கடை உள்ளது. மூன்று தளங்களில் செயல்பட்டு வரும் இக்கடையில், விலை உயர்ந்த வீட்டு உபயோக பொருட்கள், அலங்கார விளக்குள் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன.
மூன்று தளங்களிலும் குளிர்சாதன வசதிகள் உள்ளன. இதனால், கட்டடத்தில் ஜன்னலே இல்லாமல், கண்ணாடியால் மூடப்பட்டு உள்ளது.
இக்கட்டடத்தில் இருந்து நேற்று புகை வெளியேறியது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தோர், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சென்று, முதல் தளத்தில் கண்ணாடியை உடைத்து, இயந்திரம் வாயிலாக புகையை வெளியேற்றினர். 'ஏசி'யில் மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டதாக, நுங்கம்பாக்கம் போலீசார் தெரிவித்தனர்.

