ADDED : நவ 02, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
திருவொற்றியூர்: திருவொற்றியூர், எஸ்.பி.கோவில் தெருவைச் சேர்ந்த பாபுராஜ் என்பவரது குடிசை வீட்டில் தீ பற்றி, இன்று (நவ.,2) அதிகாலை எரிந்தது.
திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வருவதற்குள், பொதுமக்களே தீயை அணைத்தனர்.
எனினும், வீட்டிலிருந்த ‘டிவி’ மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், தீயில் எரிந்து நாசமாகின. வீட்டின் வெளியே பட்டாசு வெடித்தபோது, தீ பற்றி குடிசை எரிந்திருக்கலாம் என, போலீசார் கூறினர்.
