/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காலி இடத்தில் தேங்கிய குப்பையில் தீப்பற்றி விபத்து
/
காலி இடத்தில் தேங்கிய குப்பையில் தீப்பற்றி விபத்து
காலி இடத்தில் தேங்கிய குப்பையில் தீப்பற்றி விபத்து
காலி இடத்தில் தேங்கிய குப்பையில் தீப்பற்றி விபத்து
ADDED : நவ 04, 2025 12:21 AM
வேளச்சேரி: காலி இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பையில் தீ பிடித்ததால், அருகில் வசித்தவர்கள் பதற்றம் அடைந்தனர்.
அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில், வாரியத்துக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. இதில், குப்பை தொட்டியில் உள்ள மெத்தை உள்ளிட்ட கழிவுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
நேற்று, அங்கு திடீரென தீ பிடித்து குப்பை மளமளவென எரியத் துவங்கியது. அருகில் உள்ள வீடுகளில் வசித்தோர், தீ வீட்டில் பரவி விடுமோ என்ற அச்சத்தில் தவித்தனர்.
குப்பை எரிந்ததால் வெளிவந்த துர்நாற்றத்துடனான புகையால், எதிரே உள்ள தனியார் பள்ளியில், வகுப்பறையில் படித்து கொண்டிருந்த மாணவ - மாணவியர் மிகவும் சிரமப்பட்டனர்.
தகவலின்பேரில் அங்கு வந்த வேளச்சேரி தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர். தீ பரவுவது தடுக்கப்பட்டது.

