/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாரம்பரிய கலை திருவிழா சென்னையில் கோலாகலம்
/
பாரம்பரிய கலை திருவிழா சென்னையில் கோலாகலம்
ADDED : நவ 04, 2025 12:22 AM
சென்னை: பாரம்பரிய கலை திருவிழா கடந்த இரு நாட்கள் சென்னையில் கோலாகலமாக நடந்தது.
சென்னையில் கடந்த 2023ம் ஆண்டு முதல், பாரம்பரிய கலை திருவிழா நடத்தப்படுகிறது. அந்தவகையில், நடப்பாண்டு விழா, ராயப்பேட்டையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் கடந்த 1, 2ம் ஆகிய தேதிகளில் நடந்தது. அஷ்வினி சாம் பால் விஷ்வநாதன் விழாவை ஒருங்கிணைத்தார்.
பரத நாட்டிய கலைஞர் ருக்மிணியின் விஜயகுமாரின் நடனத்துடன் துவங்கியது. பின், சுபாஸ்ரீ தணிகாச்சலம் தலைமையிலான இசை நிகழ்ச்சி நடந்தது. பிரபல பின்னணி பாடகர்கள், ஹரிச்சரண் சேஷாத்ரி, சாய் விக்னேஷ், திஷா பிரகாஷ், சந்தோஷ் சுப்பிரமணியன், வித்யா கல்யாணராமன் ஆகியோர் பங்கேற்று இசை விருந்து வழங்கினர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், நடிகை ரோஹிணி மற்றும் ப்ரலயன் இணைந்து நாடகம் அரங்கேற்றினர். பின், வீணை வித்தகர் ராஜேஷ் வைத்யாவின் இசை நிகழ்ச்சியும், ராஹுல் வெல்லால் மற்றும் ஸ்பூர்த்தி ராவ் ஆகியோரின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில், கலை துறையில் சிறந்து விளங்கும் கத்தாடி ராமமூர்த்தி, குரு ஏ.கன்னியாகுமாரி, அனிதா குப்புசாமி, புஷ்பவனம் குப்புசாமி, வில்லுப்பாட்டு பாரதி, சச்சு, ஏ.பி.ஸ்ரீதர், வேலு ஆசான், பி.கே.சம்பந்தன், ஆர்.பாண்டியராஜன், இயக்குநர் வசந்த், தலைவாசல் விஜய், உன்னிகிருஷ்ணன், ஒய்.ஜி.மகேந்திரன், நித்யாஸ்ரீ மஹாதேவன், நர்த்தகி, நல்லி குப்புசாமி, எம்.எஸ்.பாஸ்கர், நெல்லை டி.கண்ணன், பாரதி ஸ்ரீதர், மாலதி, சவுமியா, சஞ்சய் சங்கர், டாக்டர் சங்கீதா ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விழாவில், பால்சன்ஸ் பியூட்டி மற்றும் பேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சாம்பால், நடிகர் நாசர் மற்றும் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

