/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
10 கிலோ கஞ்சா செங்குன்றத்தில் பறிமுதல்
/
10 கிலோ கஞ்சா செங்குன்றத்தில் பறிமுதல்
ADDED : நவ 04, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி: செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரின் தோள் பையை சோதனை செய்தபோது, அதில் 10.50 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார், கஞ்சா கடத்தி வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் சர்மா, 30, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

