ADDED : ஜூலை 13, 2025 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்: மாங்காட்டில், பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
மாங்காடு, சீனிவாசா நகரில், ஜெகன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடை உள்ளது. இங்கு, இரும்பு பொருட்களுடன் பிளாஸ்டிக், அட்டை பெட்டிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, இந்த கடையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
தீ விபத்து காரணமாக, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், 3 மணி நேரம் மக்கள் அவதிக்குள்ளாகினர். தீ விபத்து குறித்து, மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

