ADDED : ஜன 12, 2025 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழவந்தாங்கல்:பழவந்தாங்கல், பி.வி., நகரைச் சேர்ந்தவர் பங்கஜ்குமார். இவர், சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு மோப்ப நாய் பிரிவில் பணி புரிகிறார்.
இவர், நேற்று முன்தினம் டில்லி சென்றுள்ளார். நேற்று, வீட்டில் இருந்து புகை வந்தது. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி, பழவந்தாங்கல் போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது 'பிரிஜ்' தீ பிடித்து எரிந்தது தெரிய வந்தது.உடனே தீயை அணைத்தனர். பிரிஜ் கதவை முழுமையாக மூடாததாலும், கம்பரசர் இயங்கி கொண்டிருந்ததாலும், தீ பிடித்ததாக விசாரணையில் தெரியவந்தது.