/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காயலான் கடை கிடங்கில் தீ ரூ.3 லட்சம் பொருட்கள் நாசம்
/
காயலான் கடை கிடங்கில் தீ ரூ.3 லட்சம் பொருட்கள் நாசம்
காயலான் கடை கிடங்கில் தீ ரூ.3 லட்சம் பொருட்கள் நாசம்
காயலான் கடை கிடங்கில் தீ ரூ.3 லட்சம் பொருட்கள் நாசம்
ADDED : ஜூலை 12, 2025 12:20 AM

திருவேற்காடு, காயலான் கடை கிடங்கு, நேற்று தீப்பற்றி எரிந்தது.
திருவேற்காடு அடுத்த காயலான் கடை கிடங்கு நடத்துகிறார். இங்கு மெத்தை, சோபா உள்ளிட்ட பழைய பொருட்களை சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த பொருட்களில் இருந்து தேவையானதை தரம் பிரிப்பதற்காக, வடமாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 10 தொழிலாளர்கள், அங்கேயே தங்கி பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் நேற்று மதியம் கிடங்கில் தீப்பிடித்து எரிய துவங்கியது. தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். சமையல் செய்வதற்காக வைத்திருந்த ஒரு காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. தகவலறிந்து வந்த மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய பொருட்கள், 10 மூன்று சக்கர சைக்கிள்கள் ஆகியவை தீயில் கருகின. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த அசம்பாவிதம் ஏற்படவில்லை. மின் கசிவால் தீ ஏற்பட்டதா அல்லது நாச வேலை காரணமா என, திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.