/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பலகாரம் தயாரிப்பு ஆலையில் தீ இயந்திரம், உபகரணங்கள் நாசம்
/
பலகாரம் தயாரிப்பு ஆலையில் தீ இயந்திரம், உபகரணங்கள் நாசம்
பலகாரம் தயாரிப்பு ஆலையில் தீ இயந்திரம், உபகரணங்கள் நாசம்
பலகாரம் தயாரிப்பு ஆலையில் தீ இயந்திரம், உபகரணங்கள் நாசம்
ADDED : நவ 13, 2024 02:31 AM

அம்பத்துார்:அம்பத்துார் தொழிற்பேட்டை, தெற்கு பகுதி, மூன்றாவது தெருவில், அடையாறு ஆனந்த பவன் தொழிற்சாலை உள்ளது. இங்கு, 1,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
தொழிற்சாலையின் முதல் தளத்தில் இனிப்பு வகை, 2வது தளத்தில் கார வகை பலகாரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று, தரைதளத்தில் இனிப்பு, கார வகை பலகாரங்கள் பேக்கிங் செய்யும் பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்துள்ளனர். மதியம் 2:30 மணிக்கு, தொழிற்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
ஆவடி, அம்பத்துார், மதுரவாயலைச் சேர்ந்த ஐந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த 25க்கும் மேற்பட்ட வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 10க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டன.
இரண்டரை மணி நேர போராட்டத்திற்கு பின், மாலை 5:00 மணிக்கு, தீ முற்றிலும் கட்டுக்குள் வந்தது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், உபகரணங்கள் தீயில் கருகின. செவ்வாய்கிழமை தோறும் விடுமுறை என்பதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிற்சாலையில் பராமரிப்பு பணி மேற்கொண்ட போது, தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

