/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வணிக கட்டடத்தில் தீ விபத்து 100க்கும் மேல் சைக்கிள் சேதம்
/
வணிக கட்டடத்தில் தீ விபத்து 100க்கும் மேல் சைக்கிள் சேதம்
வணிக கட்டடத்தில் தீ விபத்து 100க்கும் மேல் சைக்கிள் சேதம்
வணிக கட்டடத்தில் தீ விபத்து 100க்கும் மேல் சைக்கிள் சேதம்
ADDED : செப் 25, 2025 12:53 AM

துரைப்பாக்கம், :பெருங்குடியில் ஏற்பட்ட தீ விபத்தில் ௧௦௦க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் எரிந்து நாசமாயின.
பெருங்குடி, எம்.ஜி.ஆர்., சாலையில் மூன்று மாடி கொண்ட வணிக கட்டடம் உள்ளது. இதில், சைக்கிள், எலக்ட்ரிக்கல், மெக்கானிக் கடைகள் செயல்படுகின்றன.
நேற்று மாலை, திடீரென மாடியில் செயல்படும் சைக்கிள் கடையில் தீ பிடித்தது. அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும், அலறியடித்து கடையை விட்டு வெளியேறினர்.
தகவலறிந்து வந்த துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்கும் 100க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் தீயில் எரிந்தன. துரைப்பாக்கம் போலீசாரின் விசாரணையில், மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது தெரிந்தது.