/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழிற்சாலையில் தீ விபத்து ரூ.40 லட்சம் பொருட்கள் நாசம்
/
தொழிற்சாலையில் தீ விபத்து ரூ.40 லட்சம் பொருட்கள் நாசம்
தொழிற்சாலையில் தீ விபத்து ரூ.40 லட்சம் பொருட்கள் நாசம்
தொழிற்சாலையில் தீ விபத்து ரூ.40 லட்சம் பொருட்கள் நாசம்
ADDED : ஜன 28, 2025 01:05 AM
அம்பத்துார், அம்பத்துார், பட்டரைவாக்கம் எட்டாவது தெருவில், ரப்பர் பொருட்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை உள்ளது.
நேற்று காலை 6:30 மணிக்கு, தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அம்பத்துார் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்பு வீரர்கள் செல்வதற்குள், தொழிற்சாலை முழுதும் தீப்பற்றி எரிய துவங்கியது. ஒரு மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும், தொழிற்சாலையில் இருந்த, 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், ஏற்றுமதிக்கு தயார் நிலையில் இருந்த ரப்பர் பொருட்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகின. இது குறித்து, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார், தொழிற்சாலை இயக்குநர் ஜெகன்நாதன், 58, என்பவரிடம் புகாரை பெற்று விசாரிக்கின்றனர்.