/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பைக்கிடங்கில் தீ 'பொக்லைன்' நாசம்
/
குப்பைக்கிடங்கில் தீ 'பொக்லைன்' நாசம்
ADDED : பிப் 10, 2024 12:23 AM

திருவேற்காடு, திருவேற்காடில், குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், அங்கிருந்த 'பொக்லைன்' இயந்திரமும் நெருப்பில் சிக்கி நாசமானது.
திருவேற்காடு அடுத்த கோலடியில், நகராட்சிக்கு சொந்தமான 4,800 சதுர அடி பரப்பு குப்பைக் கிடங்கு உள்ளது. நேற்று மாலை, இந்த கிடங்கில் திடீரென தீப்பற்றியது.
பூந்தமல்லி தீயணைப்பு துறையினர் வந்து, 90 நிமிடங்கள் போராடி, தீயை அணைத்தனர். இந்த விபத்தில், குப்பைக் கிடங்கில் இருந்த 'பொக்லைன்' இயந்திரமும் நெருப்பில் சிக்கி நாசமானது.
திருவேற்காடு நகராட்சி கமிஷனர் கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள், நேரில் வந்து பார்வையிட்டனர்.
குப்பைக் கிடங்கின் மேலே செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளில் உராய்வு ஏற்பட்டு, அதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், போலீசார் விசாரிக்கின்றனர்.