/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியார் கிடங்கில் தீ விபத்து ரூ.பல லட்சம் பொருள் தீக்கிரை
/
தனியார் கிடங்கில் தீ விபத்து ரூ.பல லட்சம் பொருள் தீக்கிரை
தனியார் கிடங்கில் தீ விபத்து ரூ.பல லட்சம் பொருள் தீக்கிரை
தனியார் கிடங்கில் தீ விபத்து ரூ.பல லட்சம் பொருள் தீக்கிரை
ADDED : ஜூலை 07, 2025 04:35 AM

மாதவரம்:மாதவரத்தில், தனியார் கிடங்கு திடீரென தீப்பற்றி எரிந்ததில், அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.
மாதவரம் ரவுண்டானா அருகே கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், ஆனந்த் ஆட்டோ மோட்டிவ் என்கிற பெயரில் ஒரு ஏக்கரில் தனியார் கிடங்கு செயல்பட்டு வருகிறது.
அந்த கிடங்கில் வாகன உதிரிபாகங்கள், பிளாஸ்டிக், அட்டை பொருட்கள், ரசாயனம், கூரியர் பொருட்கள், கதர் ஆடைகள் உட்பட, பல கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன.
அங்குள்ள உதிரிபாகங்கள் கிடங்கில் இருந்து, நேற்று மாலை 6:00 மணியளவில் கரும்புகை வெளியேறி தீப்பற்றி எரிந்தது.
இந்த தீயானது அருகில் உள்ள மற்ற கிடங்குகளுக்கும் பரவியது. இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.
இச்சம்பவம் குறித்து, மாதவரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர்.
உதவிக்காக, அருகில் உள்ள மாதவரம், அம்பத்துார், கொளத்துார், மணலி உட்பட பல தீயணைப்பு நிலையங்களில் இருந்து, 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில், 30க்கும் மேற்பட்ட வீரர்கள் அங்கு விரைந்தனர்.
மேலும், சென்னை குடிநீர் வாரிய தண்ணீர் லாரி மற்றும் தனியார் தண்ணீர் லாரிகளும் தீயை அணைக்க வரவழைக்கப்பட்டன. விடுமுறை தினம் என்பதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த தீவிபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாயின.
மேற்கு மண்டல இணை கமிஷனர், கொளத்துார் துணை கமிஷனர் முன்னிலையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள மாதவரம் போலீசார், தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.