ADDED : மே 30, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.நகர் :தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில், பாண்டிபஜார் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ராம் வெங்கட்ராஜ் என்பருக்கு சொந்தமான 'மகிழ் அன்னம்' என்ற உணவகத்தில் இருந்து, அதிகாலை 4:00 மணிக்கு புகை வருவதை கண்டு, தி.நகர் தியணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதேபோல் கடையின் பெயர் பலகையில் இருந்த மொபைல் எண்ணையும் தொடர்பு கொண்டு, உரிமையாளருக்கு தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து, தீயை அணைத்தனர்.
தீயில் கடையில் இருந்த மேஜை, நாற்காலி மற்றும் மின் விசிறி ஆகியவை எரிந்து நாசமாகின. பாண்டிபஜார் போலீசாரின் விசாரணையில், மின் பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ பற்றியது தெரியவந்தது.