நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி,  பூந்தமல்லி, குமணன்சாவடியில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு, உடற்பயிற்சி கூடம், மருத்துவமனை, வங்கி ஆகியவை இயங்கி வருகின்றன.
நேற்று காலை, வணிக வளாகத்தின் கீழ் தளத்தில் உள்ள மின்சாதன பெட்டியில், மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது.
பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் வந்து, தீயை அணைத்தனர். இதனால், பெரும் விபத்து தடுக்கப்பட்டது. யாருக்கும் சேதம் ஏற்படவில்லை.

