/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பட்டாசு பொறி பட்டு குடிசை உணவகம் நாசம்
/
பட்டாசு பொறி பட்டு குடிசை உணவகம் நாசம்
ADDED : ஜூலை 15, 2025 12:32 AM
பனையூர், திருவிழாவில் வெடிக்கப்பட்ட பட்டாசு பொறி பட்டு, குடிசை உணவகம் தீப்பற்றி எரிந்து நாசமானது.
கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் உள்ள கங்கையம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது. அக்கோவில் சுவாமி திருவிதி உலா நடந்ததை முன்னிட்டு, நேற்று சாலையில் பட்டாசு வெடிக்கப்பட்டது.
அதன் நெருப்பு பொறி சிதறியதில், ஒரு வீட்டின் மாடியில் இருந்த குடிசை உணவகத்தின் மீது நெருப்பு விழுந்து, குடிசை தீப்பற்றி எரிய துவங்கியது.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், காவல் துறையினர் அரை மணி நேர போராட்டத்திற்கு பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குடிசை உணவகம் தற்காலிகமாக செயல்படாமல் இருந்ததால், பெரிய அளவிலான பாதிப்புகளோ, அசம்பாவிதமோ இல்லை. இது குறித்து, கானத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.