/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்
/
எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்
எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்
எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்
ADDED : நவ 22, 2025 04:01 AM

ராயப்பேட்டை: ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில், நேற்று ஏற்பட்ட தீயை, ஒன்றரை மணி நேரம் போராடி தீயணைப்பு வீரரர்கள் அணைத்தனர்.
ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலின் இரண்டாவது கீழ் தளத்தில், மின் இணைப்பு அறை உள்ளது. இங்கு, நேற்று காலை 8:45 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. அங்கிருந்து, கேபிள் வாயிலாக, முதல் தளத்தில் உள்ள மின் இணைப்பு அறைக்கு பரவியது.
வளாகம் முழுதும் புகை சூழ்ந்ததையடுத்து, அங்குள்ள கடைகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரிவோர் அலறியடித்து வெளியேறினர்.
வாடிக்கையாளர்களும் சொற்ப அளவிலே இருந்தனர். அதனால், யாருக்கும் எந்த பாதிப்பு இல்லை; எந்த கடைகளிலும் தீ பரவவில்லை.
திருவல்லிக்கேணி, எழும்பூர், மயிலாப்பூர் தீயணைப்பு படை வீரர்கள், ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ பிடிப்பதை சாலையில் நின்று பலரும் பார்த்ததால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வந்து, வாகன நெரிசலை சீரமைத்தனர்.
மின் இணைப்பு அறையில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அண்ணா சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

