/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீயணைப்பு வீரர்களுக்கு பாம்பு பிடிக்க பயிற்சி
/
தீயணைப்பு வீரர்களுக்கு பாம்பு பிடிக்க பயிற்சி
ADDED : செப் 16, 2025 01:12 AM
சென்னை;தமிழகத்தில் பருவ மழைக்காலம் வருவதை முன்னிட்டு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் இருக்கும் கள பணியாளர்களுக்கு பாம்புகளை பிடிப்பது குறித்த வழிமுறைகளை பயிற்றுவிக்க, சென்னை பாம்பு பண்ணை அறக்கட்டளை முடிவு செய்தது.
இதன்படி, செப்., 8 முதல் பல்வேறு பிரிவுகளாக தீயணைப்பு துறையினருக்கு பாம்பு பிடிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. ஒரு பிரிவில் 35 பேர் வீதம், 14 பிரிவுகளில் தமிழகம் முழுதிலும் இருந்து, 485 பேருக்கு பாம்பு பிடிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மூன்றாவது பிரிவுக்கான பயிற்சி முகாம், சென்னை பாம்பு பண்ணையில் நேற்று துவங்கியது.
இதன் துவக்க விழாவில், தீயணைப்பு துறை வடக்கு மண்டல இணை இயக்குநர் ஜி.சத்யநாராயணன், சென்னை பாம்பு பண்ணை அறக்கட்டளை இயக்குநர் ராஜரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.