/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புயலுக்கு பின் கரை திரும்பிய படகுகள் வரத்து அதிகரிப்பால் மீன் விலை சரிவு
/
புயலுக்கு பின் கரை திரும்பிய படகுகள் வரத்து அதிகரிப்பால் மீன் விலை சரிவு
புயலுக்கு பின் கரை திரும்பிய படகுகள் வரத்து அதிகரிப்பால் மீன் விலை சரிவு
புயலுக்கு பின் கரை திரும்பிய படகுகள் வரத்து அதிகரிப்பால் மீன் விலை சரிவு
ADDED : டிச 09, 2024 03:50 AM

காசிமேடு:'பெஞ்சல்' புயல் காரணமாக, கடந்த இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன் மீன் பிடிக்க சென்ற படகுகள், பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சமடைய மீன்வளத் துறை அறிவுறுத்தியது.
இதையடுத்து, காசிமேடில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற 100க்கும் மேற்பட்ட படகுகள், ஆந்திராவில் தஞ்சமடைந்த நிலையில், நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பின.
சிறிய மீன்களின் வரத்து அதிகரித்து, மீன் விலை குறைந்து காணப்பட்டது. இதனால், காசிமேடு மீன்பிடித் துறைமுகம் விழாக்கோலம் பூண்டது.
இது குறித்து, விசைப்படகு உரிமையாளர்கள் கூறுகையில், ''கடந்த இரு வாரத்திற்கு முன், என் விசைப்படகை 8 லட்ச ரூபாய் செலவு செய்து சீரமைத்தேன். மீன்பிடிக்க சென்ற நிலையில், நேற்று 5 லட்ச ரூபாய்க்கு மீன்கள் விற்பனையானது. 3 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலம் முடிந்து இதுவரை, 18 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், உரிமையாளர்கள் தொடர் நஷ்டத்தையே சந்தித்து வருகிறோம்,'' என்றார்.
மீன் விலை நிலவரம்
மீன் வகை கிலோ (ரூ.)
வஞ்சிரம் 900 - 1100
வெள்ளை வவ்வால் 1000 - 1100
கறுப்பு வவ்வால் 450 - 500
சங்கரா 200 - 250
வரி பாறை 100 - 150
செருப்பு 300 - 400
சீலா 200 - 300
நெத்திலி 200 - 300
வாளை 100
கிளிச்ச 70 - 100
கனாங்கத்த 100 - 150
நண்டு 250 - 300
இறால் 200 - 300