/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவொற்றியூர் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் நிறுத்த சாதகமான சூழல் இல்லை மீனவர்கள் குற்றச்சாட்டு

ADDED : ஜூலை 14, 2025 02:22 AM

திருவொற்றியூர்:புதிதாக அமைக்கப்பட்ட திருவொற்றியூர் சூரை மீன்பிடித் துறைமுகத்தில் கடல் அலை உட்புகுந்து ஆர்ப்பரிப்பதால், படகுகள் நிறுத்துவதற்கு சாதகமான சூழல் இல்லை என, மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.
சென்னை, காசிமேடில் 1980ம் ஆண்டு 570 படகுகள் நிறுத்தும் வகையில் துறைமுகம் கட்டமைக்கப்பட்டது. இருப்பினும், இடப்பற்றாக்குறை பெரும் பிரச்னையாக இருந்தது. தீர்வாக, திருவொற்றியூர் குப்பத்தில் சூரை மீன்பிடித் துறைமுகம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பணிகள் 2019ல் துவங்கி, 272 கோடி ரூபாய் செலவில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, கடந்த மார்ச் 28ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த துறைமுகம், சென்னை மற்றும் காசிமேடு துறைமுகங்களின் வடிவமைப்பில் இருந்து மாறுபாடாக உள்ளது. இரண்டு துறைமுகங்களிலும், தென் கிழக்கு அலை தடுப்பு சுவர், வடக்கு கிழக்கு அலை தடுப்பு சுவரை காட்டிலும், கூடுதல் துாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், துறைமுக வளாகம் அலையின்றி குளம்போல் காட்சியளிக்கும். புயல், சூறாவளி, கனமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களிலும், துறைமுகத்திற்குள் நிறுத்தப்பட்டுள்ள படகுகளுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படாது.
ஆனால், சூரை மீன்பிடித் துறைமுகத்தில், வடகிழக்கு - தென்கிழக்கு அலை தடுப்பு சுவர், மிக அருகருகே சந்திக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதால், கடலலை நேரடியாக உட்புகுந்து, படகுகள் சேதமடையும் சூழல் உள்ளது என, மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, தென்கிழக்கு அலை தடுப்பு சுவரை, கூடுதலாக 330 அடி துாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.