/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசாருக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் டி.ஜி.பி.,யிடம் மீனவர்கள் மனு
/
போலீசாருக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் டி.ஜி.பி.,யிடம் மீனவர்கள் மனு
போலீசாருக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் டி.ஜி.பி.,யிடம் மீனவர்கள் மனு
போலீசாருக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் டி.ஜி.பி.,யிடம் மீனவர்கள் மனு
ADDED : ஜூலை 17, 2025 11:55 PM
சென்னை, 'மீனவர்கள் மீதான பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்; இல்லையெனில், விநாயகர்சதுர்த்தி மற்றும் புயல், வெள்ள பாதிப்புகளின் போது, போலீசாருக்கு உதவ மாட்டோம்' என, டி.ஜி.பி., அலுவலகத்தில், மயிலாப்பூர் பகுதி பத்து கிராம மீனவர்கள் மனு அளித்துள்ளனர்.
அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
மயிலாப்பூர் பகுதிக்கு உட்பட்ட, நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரை, பத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. அப்பகுதியில் வாழ்வதற்கே அச்சமாக இருப்பதாக கூறி, காழ்ப்புணர்ச்சி காரணமாக, 26 மீனவர்கள் மீது, பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இந்த வழக்குகளை திரும்ப பெறாவிட்டால், விநாயகர் சதுர்த்தி மற்றும் புயல், வெள்ள பேரிடர்களின் போது, மீனவர்கள் யாரும் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மயிலை பகுதி அனைத்து கிராம பஞ்சாயத்து சபை நிர்வாகி பாரதி அளித்த பேட்டி:
மீனவ மக்களின் உரிமைக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் போராடிய மக்களை ஒடுக்கும் வகையில், 26 மீனவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
எம்.எல்.ஏ.,களை ஒருமையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் எங்கள் மீது எந்த புகாரும் அளிக்கவில்லை.
உரிமைக்காக போராடும் மீனவர்கள் மீது, பட்டினப்பாக்கம் போலீசார், பொய் வழக்கு பதிவு செய்வது கண்டிக்கத்தக்கது.
விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, சிலைகளை கரைக்க, மயிலை போலீசாருக்கு மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.