/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுடுகாடுகளை மீட்க வேண்டும் ஸ்டாலினுக்கு மீனவர்கள் மனு
/
சுடுகாடுகளை மீட்க வேண்டும் ஸ்டாலினுக்கு மீனவர்கள் மனு
சுடுகாடுகளை மீட்க வேண்டும் ஸ்டாலினுக்கு மீனவர்கள் மனு
சுடுகாடுகளை மீட்க வேண்டும் ஸ்டாலினுக்கு மீனவர்கள் மனு
ADDED : நவ 09, 2025 04:21 AM
சென்னை:'நயினார்குப்பம், திருவான்மியூர் குப்பம், ஓடைக்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராம சுடுகாடுகளை மீட்டு, பாதுகாக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, நெய்தல் மக்கள் கட்சி சார்பில், மீனவர்கள் கோரிக்கை கோரி அனுப்பி உள்ளனர்.
அவர்கள் அளித்த மனு:
சோழிங்கநல்லுார் உத்தண்டி அருகில், பாரம்பரியமிக்க நயினார்குப்பம் என்ற மீனவ கிராமம் உள்ளது. இங்குள்ள குறிப்பிட்ட பகுதியை, நயினார் குப்பம் மீனவ மக்களும், பிற சமூகத்தினரும், தங்கள் மூதாதையர் காலம்தொட்டு, பல தலைமுறைகளாக, மயான பூமியாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலத்திற்கு சொந்தம் கொண்டாடி, 2021ம் ஆண்டில், தனிநபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால், இறுதித் தீர்ப்பு வரும் வரை இந்த இடத்தில் சடலங்களை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது என, சென்னை மாநகராட்சி அறிவிப்பு பலகை வைத்துள்ளது.
திருவான்மியூர் குப்பம், ஓடைக்குப்பம் மீனவ சுடுகாடுகளிலும் பிரச்னை உள்ளது. இதுபோன்று பல மீனவ கிராமங்கள், தங்கள் சுடுகாட்டை பாதுகாக்க உதவும் அடிப்படை சட்ட உரிமைகளை இழந்து வருகின்றன.
எனவே, இப்பிரச்னையில், முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, இந்த மயான பூமியை மக்கள் பயன்படுத்தவும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்து, சட்ட ரீதியாக மயான பூமியை பெற்றுத் தரவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

