/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீன்பிடி தடைக்காலம் எதிரொலி காசிமேடில் வரத்து குறைவு
/
மீன்பிடி தடைக்காலம் எதிரொலி காசிமேடில் வரத்து குறைவு
மீன்பிடி தடைக்காலம் எதிரொலி காசிமேடில் வரத்து குறைவு
மீன்பிடி தடைக்காலம் எதிரொலி காசிமேடில் வரத்து குறைவு
ADDED : மே 05, 2025 04:10 AM

காசிமேடுநு மீன்பிடித் தடைக்காலத்தை முன்னிட்டு, விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால், வரத்து குறைந்து மீன் விலை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம், கடந்த ஏப்., 15ம் தேதி துவங்கி ஜூன் 14 வரை, 61 நாட்கள் அமலில் உள்ளது. இதனால், காசிமேடில் 800க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் ஆழங்குறைந்த கடற்கரை பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளன.
இக்காலகட்டத்தில், மீனவர்கள் விசைப்படகுகளில் பழுது நீக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள், சிறிய படகுகள் மூலம் வழக்கம் போல, மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இவற்றால் பிடிக்கப்படும் மீன்கள் போதுமானதாக இல்லை.
மீன் வாங்க, நேற்று மக்கள் கூட்டம் அதிகம் இருந்த நிலையில், குறைந்த அளவு மீன் மட்டுமே விற்பனைக்கு வந்ததால், விலை உயர்ந்து காணப்பட்டது.