/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு விற்ற ஐவர் கைது
/
வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு விற்ற ஐவர் கைது
ADDED : ஏப் 09, 2025 12:24 AM

புதுவண்ணாரப்பேட்டை, சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, எம்.பி.டி., மைதானத்தில், உடல்வலி நிவாரண மாத்திரைகளை போதைக்கு விற்பதாக, புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனையில் ஈடுபட்ட ஐவர் கும்பலை கைது செய்தனர்.
விசாரணையில், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திக், 25; சூர்யா, 21; பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகேஷ், 20; கொளத்துாரை சேர்ந்த நரேஷ்குமார், 22; வினோபா நகரை சேர்ந்த கார்த்திக், 21 என்பது தெரிந்தது.
அவர்களிடமிருந்து, 84 உடல்வலி நிவாரண மாத்திரைகள், ஒரு கிலோ கஞ்சா, ஐந்து மொபைபோன்கள், இரண்டு கத்திகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் சூர்யா மீது, மூன்று திருட்டு வழக்குகளும், நரேஷ்குமார் மீது நான்கு வழக்குகளும் உள்ளன.