ADDED : மார் 01, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி, புளியந்தோப்பு அருகே, அம்பேத்கர் கல்லுாரி சாலையிலிருந்து வியாசர்பாடி வரையிலான மேம்பால கட்டுமான பணியில், வடமாநிலத்தவர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 21ம் தேதி இரவு 11:00 மணியளவில், மர்ம நபர் ஒருவர், பணியில் இருந்த வடமாநில பணியாளர்களை மிரட்டி பணம், மொபைல்போன், இரும்பு பொருட்களை திருடிச் சென்றார்.
இதனால், பணியாளர்கள் பலர் வேலையை விட்டு, சொந்த ஊருக்கு கிளம்பினர்.
இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில், கட்டுமான பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதை விசாரித்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட புளியந்தோப்பு 'தெனாலி' உதயகுமார், 24, 'டோலு' செல்வகுமார், 24, சத்தியவாணி முத்து நகர் தனுஷ், 18, ராஜேஷ்,18 மற்றும் 17 வயது வாலிபர் உட்பட ஐவரை கைது செய்தனர். சபரி என்பவர் தலைமறைவானார்.

