/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை பொருள் கடத்தல் ஐந்து பேர் கும்பல் கைது
/
போதை பொருள் கடத்தல் ஐந்து பேர் கும்பல் கைது
ADDED : மார் 24, 2025 03:26 AM

சென்னை:சில தினங்களுக்கு முன், சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ் - சுமித் சாலைகள் சந்திப்பு பகுதியில், மெத் ஆம்பெட்டமைன் போதை பொருளை விற்க முயன்ற, சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த விக்னேஸ்வரன்,24 உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், மென்பொருள் நிறுவன ஊழியர்கள் என்பதும், அவர்களுக்கு கேரள மாநிலத்தில் இருந்து மெத் ஆம்பெட்டமைன் வினியோகம் செய்யப்படுவதும் தெரியவந்தது.
இதையடுத்து, போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு மற்றும் நுங்கம்பாக்கம் போலீசார், கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நிக்கில்,34 என்பவரை நேற்று கைது செய்துள்ளனர்.
நுங்கம்பாக்கம்
நுங்கம்பாக்கம் கல்லுாரி சாலையில், பிப்.,17 ல், மெத் ஆம்பெட்டமைன் விற்க முயன்ற, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, கீழ்மலையைச் சேர்ந்த ராம்சந்தர்,34 உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
மூவருக்கும் மெத் ஆம்பெட்டமைன் வினியோகம் செய்த, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கடவுகூட்டி உதயகுமார்,27 என்பவர் கைது செய்யப்பட்டார்.
வேப்பேரி
வேப்பேரி பிரிக்ளின் சாலை, வெங்கடம்மாள் சமாதி தெருவில், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்ற, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சஞ்சய்குமார்,23; சாம் ஜாஸ்வின்,23; கீழ் கட்டளையைச் சேர்ந்த மோகன்ராஜ்,24 ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 530 கிராம் கஞ்சா, 600 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.