/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடி இரட்டை கொலையில் மேலும் ஐந்து பேர் கைது
/
ஆவடி இரட்டை கொலையில் மேலும் ஐந்து பேர் கைது
ADDED : ஜன 22, 2025 12:43 AM

ஆவடி. ஆவடி அடுத்த பட்டாபிராம், ஆயில்சேரி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரெட்டைமலை ஸ்ரீனிவாசன், 27, அவரது தம்பி ஸ்டாலின், 24. ரவுடிகளான இருவர் மீதும், பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த 18ம் தேதி இரவு, இருவரையும் மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக 19ம் தேதி, ஐந்து பேரும், நேற்று முன்தினம் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
பட்டாபிராம், சோராஞ்சேரி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த மாதேஷ், 22, அவரது தம்பி கணேஷ், 20, பட்டாபிராம், அணைக்கட்டுசேரி, ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த தருண், 22, பட்டாபிராம், குப்பத்துமேடு பகுதியைச் சேர்ந்த தினேஷ், 21, மற்றும் வினோத், 20, ஆகிய ஐந்து பேரை ஆவடி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை ஆவடி பேருந்து நிலையம் அருகில் அவர்களை போலீசார் கைது செய்தனர்.