/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளத்தில் இறங்கிய பஸ் ஐந்து பெண்கள் காயம்
/
பள்ளத்தில் இறங்கிய பஸ் ஐந்து பெண்கள் காயம்
ADDED : நவ 05, 2025 01:32 AM

செங்குன்றம்: ஆன்மிக சுற்றுலா சென்ற ஆம்னி பேருந்து, பள்ளத்தில் இறங்கிய விபத்தில், ஐந்து பெண்கள் காயமடைந்தனர்.
கும்மிடிபூண்டியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள், பவுர்ணமி கிரிவலத்திற்காக நேற்று, ஆம்னி பேருந்தில் திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
பேருந்தை கும்மிடிபூண்டியை சேர்ந்த லோகேஷ், 31, என்பவர் ஓட்டிச் சென்றார். மீஞ்சூர் -- வண்டலுார் வெளிவட்டச் சாலை வழியே, செங்குன்றம் கோணிமேடு பகுதியில் சென்றபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் இறங்கியது.
இதில், பேருந்தில் பயணித்த ஐந்து பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள், அருகே இருந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து, செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

