/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அறிவிப்போடு முடங்கிப்போன மாங்காடு பஸ் நிலைய திட்டம்
/
அறிவிப்போடு முடங்கிப்போன மாங்காடு பஸ் நிலைய திட்டம்
அறிவிப்போடு முடங்கிப்போன மாங்காடு பஸ் நிலைய திட்டம்
அறிவிப்போடு முடங்கிப்போன மாங்காடு பஸ் நிலைய திட்டம்
ADDED : நவ 05, 2025 01:33 AM
மாங்காடு: அறிவிப்போடு நின்றுபோன மாங்காடு பேருந்து நிலைய திட்டத்தை, விரைவாக செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மாங்காட்டில், காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் வந்து வழிபாடு செய்கின்றனர்.
இந்நிலையில், மாங்காட்டில் பேருந்து நிலையம் இல்லை. இதனால், பேருந்துகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
தாம்பரம், பல்லாவரம், குன்றத்துாரில் இருந்து பூந்தமல்லி, ஆவடி செல்லும் போருந்துகள், சாலையோரம் பயணியரை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன. இதனால், மாங்காட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.
இதற்கு தீர்வாக, புதிதாக பேருந்து நிலையம் கட்ட, குன்றத்துார் - -குமணன்சாவடி சாலையில், காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 50 சென்ட் நிலத்தை, 10 லட்சம் ரூபாய் செலுத்தி, நகராட்சி பெயரில் வாங்க, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
மேலும், பேருந்து நிலையம் கட்டுவதற்கு, நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 6.4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள், பெயரவில் மட்டுமே உள்ளன. இதுவரை, எந்த பணிகளும் துவங்கவில்லை.
மாங்காடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை, விரைவாக செயல்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

