/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் கம்பங்களில் கொடி கம்பங்கள் திருவள்ளூர் தி.மு.க.,வினர் அடாவடி
/
மின் கம்பங்களில் கொடி கம்பங்கள் திருவள்ளூர் தி.மு.க.,வினர் அடாவடி
மின் கம்பங்களில் கொடி கம்பங்கள் திருவள்ளூர் தி.மு.க.,வினர் அடாவடி
மின் கம்பங்களில் கொடி கம்பங்கள் திருவள்ளூர் தி.மு.க.,வினர் அடாவடி
ADDED : மே 21, 2025 12:33 AM

ஆவடி, :திருவள்ளூர் மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் பட்டாபிராம், தண்டுரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. இதில், மண்டல பொறுப்பாளரும், தி.மு.க., எம்.பி.,யுமான ஆர். ராசா பங்கேற்றார்.
அவரை வரவேற்கும் வகையில், நெமிலிச்சேரி வெளிவட்ட சாலை முதல் இந்து கல்லுாரி ரயில் நிலையம் வரை பல இடங்களில் ராட்சத கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. சி.டி.எச்., சாலை முதல் விழா நடக்கும் இடம் வரை 2 கி.மீ., துாரத்துக்கு மின் விளக்கு கம்பங்களில் விதிமீறி கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளன. பட்டாபிராம் - தண்டுரை ரயில்வே மேம்பாலத்தில், மின் விளக்கு கம்பங்களில் தி.மு.க., கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
சில தினங்களாக ஆவடி சுற்றுவட்டார பகுதியில் திடீர் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மின் கம்பங்களில் வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்கள் வாயிலாக அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, தி.மு.க., வினர் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இதுபோன்று கொடிகம்பங்கள் நடுவதை தவிர்க்கலாம் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.