/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெங்களூருவில் மோசமான வானிலை சென்னைக்கு திரும்பிய விமானங்கள்
/
பெங்களூருவில் மோசமான வானிலை சென்னைக்கு திரும்பிய விமானங்கள்
பெங்களூருவில் மோசமான வானிலை சென்னைக்கு திரும்பிய விமானங்கள்
பெங்களூருவில் மோசமான வானிலை சென்னைக்கு திரும்பிய விமானங்கள்
ADDED : மே 01, 2025 11:51 PM
சென்னை, பெங்களூரில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, அங்கு தரையிறங்க வேண்டிய ஐந்து விமானங்கள் சென்னையில் தரையிறங்கின.
பெங்களூரில் நேற்று முன்தினம் காற்றுடன் கனமழை பெய்யதது. இதனால், பெங்களூர் விமான நிலையத்தில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
நேற்று முன்தினம் நள்ளிரவு ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு, நள்ளிரவு 12:19 மணிக்கு வர வேண்டிய இண்டிகோ, ஹாங்காங்கில் இருந்து நள்ளிரவு 12:25 மணிக்கு வர வேண்டிய கேத்தாய் பசிபிக் விமானம்,
நாக்புரில் இருந்து நள்ளிரவு 12:53 மணி; கோவாவில் இருந்து நள்ளிரவு 1:20 மணி; ஜெர்மன் நாட்டின் பிராங்பர்ட் நகரில் இருந்து நள்ளிரவு 1:55 மணிக்கு வரும் லுப்தான்சா விமானம் என, ஐந்து விமானங்கள் பெங்களூரில் தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன.
அங்கு வானிலை சீரைடந்தபின், விமானங்கள் மீண்டும் பெங்களூருக்கு திரும்பியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
***
★★★