/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கன்டெய்னர் லாரி மோதி உணவு டெலிவரி ஊழியர் பலி
/
கன்டெய்னர் லாரி மோதி உணவு டெலிவரி ஊழியர் பலி
ADDED : மே 31, 2025 03:08 AM
சென்னை:வானகரம், கணபதி நகரைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம், 61; உணவு டெலிவரி ஊழியர். இவர், நேற்று இரவு பூந்தமல்லி நெடுஞ்சாலை வானகரம் சிக்னல் அருகே, இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றார்.
அப்போது, அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரி அவரது வாகனத்தில் மோதியது. இதில் கீழே விழுந்தவர் மீது லாரி ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், விபத்து ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி ஓட்டுநர் வெங்கடேசன், 31, என்பவரை கைது செய்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.