/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாளில் அன்னதானம்
/
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாளில் அன்னதானம்
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாளில் அன்னதானம்
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாளில் அன்னதானம்
ADDED : டிச 29, 2025 07:37 AM

தாம்பரம்: த.மா.கா., தலைவர் ஜி.கே. வாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, அக்கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் வேணுகோபால், தாம்பரத்தில் 3,000 பேருக்கு நேற்று அன்னதானம் வழங்கினார்.
த.மா.கா., தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் பிறந்த நாள் நிகழ்ச்சி, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட த.மா.கா., சார்பில், நேற்று கொண்டாடப்பட்டது.
தாம்பரம் பேருந்து நிலையத்தில், மாவட்ட தலைவர் வேணுகோபால், 3,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து, குரோம்பேட்டை சங்கரா முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் முழுதும், த.மா.கா., கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு பல்வேறு இடங்களில் கட்சி நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில், தாம்பரம் மாநகராட்சி 60வது வார்டு கவுன்சிலர் கீதா, கட்சி நிர்வாகிகள் மூர்த்தி, வெங்கட பெருமாள், பொன்ராஜ், லோக சுப்பிரமணியம், முருகன், கந்தசாமி, சஞ்சீவி, லட்சுமிபதி, லட்சுமணன், மகளிர் அணி நிர்வாகி ராஜகுமாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

